Dulquer Salmaan: சுதா கொங்கராவுடன் துல்கரும் சூர்யாவும்.. உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் மகனான இவர், தமிழில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ கே கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக மாறினார் துல்கர்.
அதன் பின் பிஸியான ஹீரோவாக வலம் வந்த துல்கர் கடந்த வருடம் வெளியான சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
மேலும் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஸ்டார் ஹீரோவான சூர்யாவுடன் இணைந்து துல்கர் நடிக்க இருப்பதாக ருசிகர தகவல் பரவி வருகிறது.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்போடு காத்திருகின்றனர்.