Sarath Kumar: சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பிறந்தநாள் ஆல்பம்
ராமநாதன் சரத்குமார் - நடிகர், அரசியல்வாதி, திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், பத்திரிகையாளர், தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என ஒரு மல்டிடாஸ்க்கர்
130-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.
சரத்குமார் சமாஜாம்லோ ஸ்த்ரீயில் என்ற தெலுங்கு படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
வில்லனாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி, பின்பு தனது திறமையால் சுப்ரீம் ஸ்டாராக சினிமா துறையில் முன்னேறினார்
சரத்குமார் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளும், மூன்று பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்
2006 முதல் 2015 வரை தொடர்ந்து மூன்று முறை நடிகர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்
2007-ஆம் ஆண்டில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் தொடங்கினார்,
நடிகை ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்து கொண்டார்.வரலக்ஷ்மி , பூஜா , ரயன் , ராகுல் இவர்களின் குழந்தைகளாவர்