HBD Superstar Rajinikanth : சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா? ராகங்களில் தொடங்கிய நடிப்பு வரலாறு!
ரஜினிகாந்த் என்ற பெயருக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் தலையை மெல்ல கோதிவிடும் தனி ஸ்டைல் தானாக வந்துவிடும்.
முக்காலத்தையும் தன் மூர்க்கத்தனமான தனி வழியால் தடம் (தடயத்தை) பதித்தவர்.
எத்தனையோ ஹீரோக்கள் வந்து, நின்று, சென்றாலும் யாராலையும் நெருங்க முடியாத சூப்பர் நட்சத்திரமாய் நடை பயில்கிறார்.
ஹீரோக்களின் பட்டியல் இந்த பக்கம் தொடர்ந்து உயர்ந்தாலும், மறு பக்கம் மாறா பக்கமாகவே சூப்பர் ஸ்டார் நச்சென்று நிற்பார். தொடக்கத்தில் வில்லனாக அவதரித்து, ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து எட்டாத உயரத்தை எளிய மனதால் எட்டிப்பிடித்தவர்.
ஸ்டைல், மாஸ், நடை, உடை, பாவனை என தனித்துவ நடிப்பால் மிரட்டி, எதிர்ப்பவர்களை தனது ரசிகராக்கியவர்.
ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் 'தலைவா' என்ற ஒற்றை சொல்லுக்கு இவரே உரிமையாளர்.
100 கோடி வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்டு தன் வரிசையில், பிற ஹீரோக்களை நடக்க செய்தவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் பேர் நான் தான், அடுத்த சூப்பர் ஸ்டாராக மாறவேண்டும் என்று விரும்பினாலும் தமிழ் சினிமாவில் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால்..?
சின்ன குழந்தையும் சொல்லும் ரஜினி காந்த் என்று.....
நாடெங்கும் சொல்லும் ஒரு வார்த்தை ரஜினி... ராகங்களில் தொடங்கிய வரலாறு!