இது என்ன பர்த்டே பார்ட்டியா; மது பார்ட்டியா? ஒரே பாட்டிலா இருக்கு; குஷி மோடில் சுந்தர் சி!
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ஆம் தேதி வெளியாகி திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
ரூ.15 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.44 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. விரைவில், ரூ.50 கோடி வசூலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பது போன்று படத்தின் வெற்றியை கொண்டும் வகையிலும் சுந்தர் சி தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் பார்ட்டி கொடுத்துள்ளனர்.
இந்த பார்ட்டியில் சுந்தர் சி தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். அதோடு விஷால், மீனா, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், டிடி, ஐஸ்வர்யா ராஜேஷ், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, சங்கீதா ஆகியோர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா வெளியிட்டுள்ளார். மேலும் 2025-ஆம் ஆண்டு நடந்த முதல் கெட் டூ கெதர் பார்ட்டி என தெரிவித்துள்ளார்.
இதில் மீனாவின் தோளில் விஷால் கை போட்டது போன்று இருக்கும் புகைப்படம் தான் இப்போது வைரல். ஏற்கனவே மதகஜராஜா பட புரோமோஷன் நிகழ்ச்சியில் குஷ்புவை கட்டி பிடித்த போட்டோ மற்றும் வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க, கேஎஸ் ரவிக்குமார் இருக்கும் புகைப்படத்திற்கு பின்புறம் சரக்கு பாட்டில்கள் வரிசையாக இருக்கிறது. அவர்களுக்கு முன்புறம் உள்ள டேபிளில் மது மற்றும் சிக்கன் இருப்பது தெரிகிறது. இதை வைத்து இது என்ன சரக்கு பார்ட்டியோ அல்லது பர்த்டே பார்ட்டியா என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.