Suhasini Maniratnam Photos : நடிகை சுஹாசினி பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!
கல்லூரியில் இயற்பியல் படித்து வந்த இவர், ஒரு ஆண்டிற்கு பின், அதை விட்டுவிட்டு மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு கற்க தொடங்கினார். அவர் படித்த காலத்தில் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவில் பட்டம் பெற்ற ஒரே பெண் இவர்தான்.
உதவி ஒளிப்பதிவாளராகவும் ஒப்பனை கலைஞராகவும் திரையுலகில் அறிமுகமான இவர் 1980 இல் நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். நடித்த முதல் படத்திலே மாநில விருதை தட்டிச்சென்றார்.
ஹேர் ஸ்டைலிட், வசன கர்த்தா, பாடகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், இயக்குநர் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் சுஹாசினி.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், தமிழ் படங்களை விட அதிகமான கன்னட படங்களில்தான் நடித்துள்ளார்.
2012 இல் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடந்த ஒன்பதாவது இந்திய திரைப்பட விழா உட்பட பல விருதுகள், நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.
கோலிவுட்டின் ரொமாண்டிக் இயக்குநரான மணிரத்னத்தின் மனைவியான சுஹாசினி இயக்கிய ‘இந்திரா’எனும் திரைப்படம் மாநில விருதைப் பெற்றது.