STR 48 Update : இன்று மாலை வெளியாகவிருக்கும் சிம்பு படத்தின் சூப்பர் அப்டேட்!
ஒரு பெரிய இடைவேளைக்கு பின்னர், வெங்கட் பிரபுவின் மாநாடு படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிம்பு.
அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாக தகவல் பரவியது
அதற்கு ஏற்றவாறு, எஸ்டிஆர் 48-ஐ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ராஜ் கமல் பிலிம்ஸ்.
இந்நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி முக்கியமான அறிவிப்பு வரும் என்று சொல்லப்பட்டது.
அந்த வகையில், இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் ஒன்று வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. எஸ்டிஆர் 48 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது