வெளியானது ‘ஸ்பைடர் மேன் அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ்’ பட ட்ரெய்லர்!
ஸ்பைடர் மேன் கதை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் படமான ‘ஸ்பைடர் மேன் இன் டூ த ஸ்பைடர் வெர்ஸ்’படம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது
ஸ்பைடர் மேன் காமிக்ஸின் உண்மைத்தன்மையை மிக நெருக்கமாகக் காட்சிப்படுத்திய இப்படம், 2021 ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டித்தூக்கியது.
’மைல்ஸ் மொரேல்ஸ்’ எனும் சிறுவனை மையப்படுத்தி அமைந்திருக்கும் இப்படம், கறுப்பினத்தவரை மையப்படுத்தி வந்த முதல் ஸ்பைடர் மேன் படமாகும்.
’மல்ட்டி வெர்ஸ்’ கான்செப்ட்டுக்கு மார்வல் உலகின் அனைத்துப் படங்களுக்கும் முன்னோடியாக விளங்கும். இப்படத்தின் இரண்டாம் பாகமான வருகின்ற ஜுன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது
கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் தாம்ப்சன் உள்ளிட்ட 3 இயக்குநர்கள் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படம் வருகின்ற ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என திறைப்பட குழு அறித்துள்ளது
படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது