Yaaradi Nee Mohini: ’அதுக்குள்ள 15 ஆண்டுகள் ஆயிடுச்சா..?’ காதலிக்க கற்றுக்கொடுத்த யாரடி நீ மோகினியை கொண்டாடும் ரசிகர்கள்!
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2009ல் வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி
நடுத்தர வாழ்க்கையை வாழும் காதநாயகன் வேலை தேடி வரும் தனுஷை அதட்டும் அப்பாவாக ரகுவரன் வருகிறார்.
கதாநாயகியை ஒரு கடை தெருவில் கண்ட கதாநாயகன் பின்தொடர்ந்து அவள் வேலைசெய்யும் இடத்திலேயே கஷ்டப்பட்டு வேலை வாங்குவார். ஒரே இடத்திலே வேலை செய்யும் கீர்த்தியை நயன்தாரா) இம்ப்ரெஸ் செய்யும் காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து கதாநாயகி கீர்த்தி முன்பு கெத்து காட்டும் காட்சி, அலுவலகத்தில் இருக்கும் சகா பணியாளர்கள் கதாநாயகனை கேலி செய்யும் காட்சி மக்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தும்.
கதாநாயகி, ரகுவரனை அடித்து அசிங்கப்படுத்திய அதே நாளில், அவர் இறந்து விடுவார்.
தந்தையை இழந்து தனிமையில் வாழும் கதாநாயகன், நண்பரின் ஊருக்கு சென்று எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பார்.
நண்பனின் குடும்பத்தோடு ஒன்றி வாழும் கதாநாயகன், அந்த குடும்பத்தில் ஒருவராகவே வாழ ஆரம்பித்து விடுவார். கதாநாயகியின் தங்கை கதநாயகனை காதலிக்கும் காட்சி நகைச்சுவைக்கு உரியது. அவரின் வெள்ளந்தி செயல்கள் மூலம் வீட்டை மட்டும் இல்லாமல் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பார். கதாநாயகியின் குடும்பம் ஒரு ஆச்சாரமான குடும்பம் என்பதால் இவர்களின் காதலை ஏற்க மறுப்பார்கள். கதாநாயகனின் நண்பன் தனக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி விடுவார். கதாநாயகன், நாயகியின் பாட்டியையே மட்டும் அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு வந்து விடுவார்.
பின் இவர்களின் காதலை புரிந்து கொண்டு கதாநாயாகியின் குடும்பம் இருவரையும் சேர்த்து வைத்து விடுவார்கள். இந்த நிறைவை கொண்ட இந்த யாரடி நீ மோகினி திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 வருடம் நிறைவு பெற்றுள்ளது.