South Trailer Records : ஒரே நாளில் அதிக பார்வைகளையும் லைக்ஸ்களையும் குவித்த தென் இந்தியப் படங்களின் ட்ரெய்லர்கள்!
ஒரு படம் மீது எதிர்ப்பார்பு குவிந்து இருந்தால், அப்படத்தின் ட்ரெய்லர் எப்போதுதான் வரும் என்ற ஆவல் இருக்கும். அதுவே, அதே படத்தில் ஒரு பெரிய ஸ்டார் நடித்து இருந்தால் கேட்கவே தேவையில்லை, முந்தைய ரெக்கார்ட்களை பொடி பொடியாக நொறுக்கும் வகையில் மில்லயன் கணக்கான பார்வைகளையும், லைக்ஸ்களையும் அந்த ட்ரெய்லர் வீடியோ பெறும். அந்த வகையில், ஒரே நாளில் அதிக பார்வைகளையும் லைக்ஸ்களையும் பெற்ற தென் இந்தியப் படங்களின் ட்ரெய்லர்களை பற்றி பார்க்கலாம்.
விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கும் லியோ படம், ஒரே நாளில் 31.9 மில்லயன் பார்வைகளையும் 2.64 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் ஒரே நாளில் 30 மில்லியன் பார்வைகளையும் 2.22 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றது.
28 மில்லியன் பார்வைகளை பெற்ற அஜித்தின் துணிவு மூன்றாவது இடத்தில் இருக்க, 1.83 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற வாரிசு படம் அதிக லைக்ஸ் பெற்ற தென்னிந்திய படங்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடிக்கிறது.
மகேஷ் பாபுவின் சர்கார் வாரி பாட்டா 26.77 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது அதனை அடுத்து பிரபாஸின் ராதே ஷ்யாம் 23.20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
பிகில் 1.66 மில்லியன் லைக்ஸ்களையும், வலிமை 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று அதிக லைக்ஸ்களை பெற்ற தென்னிந்திய படங்களின் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தை பிடிக்கிறது.