Snehan and Kannika wedding pics | கமல் தலைமையில் நடந்த சினேகன்-கன்னிகா திருமணம் : புகைப்படங்கள்
ஜூன் 29-ஆம் தேதி மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த திருமணம் பெற்றது
இந்த திருமணத்தில் இயக்குநர் பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நடிகை கன்னிகா ரவி, சமுத்திரக்கனி நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக சினேகன் மற்றும் கன்னிகா ரவி காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் தற்போது இந்த திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகன் மற்றும் கன்னிகா, கமலுக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்
கமல்ஹாசன் மணமக்களை வாழ்த்திய தருணம்
முனைவர் திரு.கு. ஞானசம்பந்தன் மணமக்களை வாழ்த்தி பேசினார்
கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்