SK 21 : வண்டிய விட்ரா ஊருக்கு.. காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய SK 21 படக்குழு!
கௌதம் கார்த்திக் நடித்த ரங்குன் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றது.
இந்நிலையில் தற்போது காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்தியதன் காரணமாக சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கவிருப்பதன் காரணமாக காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சில நிகழ்வுகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியது SK 21 படக்குழு.