Ayalaan Audio Launch : அயலான் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கிறது தெரியுமா?
நேற்று இன்று நாளை படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் ரவிக்குமார் தற்போது ஏலியன் கதையை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'அயலான்'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஈஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2021ம் ஆண்டு தொடக்கத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளால் இப்படம் வெளியாக தாமதமானது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயலான் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டலில் நடைபெற உள்ளது
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஏலியன் ஜானர் என்பதால் இப்படத்திற்கு குழந்தை ரசிகர்கள் ஏராளமானோர் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -