10YearsOfVVS : சங்கம் உருவாகி பத்து வருசம் ஆகிடிச்சு..பத்து ஆண்டுகளை கடந்த போஸ் பாண்டியின் கதை!
பொன்ராமின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்தனர்.
கதைக்களம் : காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் சென்று விட்டாலும் மனம் தளரக் கூடாது என்ற கொள்கையோடு செயல்படுகிற சங்கத்தின் தலைவர் சிவகார்த்திகேயன், செயலாளர் சூரி. இதனிடையே சிவகார்த்திகேயன் டீச்சராக வரும் பிந்து மாதவிக்கு விடும் காதல் தூதில் வாண்டட் ஆக வந்து மாட்டிக் கொள்கிறார் ஸ்ரீ திவ்யா.
அவரின் அப்பா ஊர் பெரிய மனிதரான சத்யராஜ். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவுடன் ஊரை விட்டு ஓடி செல்ல, அவரை பழிவாங்க சத்யராஜ் துப்பாக்கியுடன் செல்ல என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.
தொடக்க பாடலான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். மேலும் ஊதா கலரு ரிப்பன், பார்க்காத பார்க்காத, கண்ணால சொல்லுற பாடல் என அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
2013 ஆம் ஆண்டு வெளியான வருதப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி திரையரங்கில் இன்று மாலை 7 மணிக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்படவுள்ளது.