Rashmika Mandanna : ராஷ்மிகாவின் காலில் விழுந்த உதவியாளர்.. செய்வதறியாது திகைத்து போன இளம் நடிகை!
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா ஆகிய படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் விஜய்யுடன் வாரிசு படத்தில் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்களில் ஆடி அசத்தினார்.
இவரின் உதவியாளரான சாய் என்பவரின் திருமண நிகழ்ச்சிக்கு மஞ்சள் நிற சேலை அணிந்து சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
மணமக்களுடன் புகைப்படன் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தார். எதிர்பாராத விதமாக, மணமக்கள் ராஷ்மிகாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். அப்போது ராஷ்மிகாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனார்.
இந்த ஜோடிகளின் திருமணம் குறித்து, “எனக்கு சாய்யை, 6-7 வருடங்களாக தெரியும். அவரின் குடும்பத்தை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தேன். அவர்களும் என் குடும்பம் போல்தான். சாயிற்கு திருமணம் நடந்து விட்டது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னை சுற்றி இருக்கும் அன்பான மக்கள், சிறந்த மனிதர்களாக மாறும் போது எனக்கு சந்தோஷமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர்களை சந்தோஷமாக பார்பதற்கு நன்றாக உள்ளது. சாயிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது என்னை மிகவும் சந்தோஷமாக்கியுள்ளது. வாழ்த்துகள் சாய் பாபு, ப்ரீத்தி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தில் நிரம்பி இருக்கட்டும் என நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்.