Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ் கே 21 படத்தின் டைட்டில் டீசர் நேற்று மாலை வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
எல்லைப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலில் நடக்கும் காட்சிகளை இந்த டீசர் உள்ளடக்கியுள்ளது. அப்படிப்பட்ட சூழலில் சக ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், சில வசனங்களை பேசுகிறார் சிவா. அத்துடன் இப்படத்திற்காக உடல் எடையை கூட்டியுள்ளார்.
இதுவரை காமெடி, ரொமாண்டிக், கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக சீரியஸான ஆக்ஷன் படக்கதையை தேர்வு செய்துள்ளார்.
சிவாவின் ரசிகர்கள், “வேற லெவல் சிவா அண்ணா” என அவரை போற்றினாலும், ஒரு சிலர் இந்த டீசரை நெகடீவாக விமர்சித்து வருகின்றனர்.
சிவாவின் ரசிகர்கள், “வேற லெவல் சிவா அண்ணா” என அவரை போற்றினாலும், ஒரு சிலர் இந்த டீசரை நெகடீவாக விமர்சித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -