Sivakarthkeyan: சுதா கொங்கரா - SK இணையும் படத்தில் வில்லனாகும் ஜெயம் ரவி! ஹீரோயினாக அக்கட தேசத்து நாயகி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, அமரன் திரைப்படம் தற்போது சுமார் 400 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை, 'டான் பிச்சர்ஸ்' நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இது டான் பிச்சர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பாகும்.
இது சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்க இருந்த புறநானூறு திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் இளம் நடிகர் அதர்வா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி சந்திரன் பணியாற்றும் நிலையில், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.