GV Prakash Saindhavi : 'நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே..' - திருமண நாளை கொண்டாடும் ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதி!
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் சைந்தவி தம்பதியினர் இன்று தனது பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள்
ஜி.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே இருவரும் காதலித்து வந்தார்கள்.
கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2020-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஜிவி இசையமைத்த பல அழகான பாடல்களை தனது குரலின் மூலமாக மேலும் அழகாக்கியவர் சைந்தவி.
யாரோ இவன், பிறை தேடும், என்னாச்சு ஏதாச்சு, யார் இந்த சாலையோரம் ஆகிய பாடல்களை இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.
இதுகுறித்து சைந்தவி இன்ஸ்டாவில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். ‘எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழிந்துவிட்டன ஆனால் திரும்பிப் பார்க்கையில் நேற்றுதான் திருமணம் ஆனது போல் உள்ளது. ஒரு நல்ல நண்பனாக , ஒரு பாசத்துக்குரிய கணவனாக, மகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்காக நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.