Alka Yagnik : யூ டியூபின் மூளை முடுக்கில் ஒலித்த இந்திய பெண்ணின் குரல்.. தும் சாத் ஹோ பாடகி படைத்த புது சாதனை!
சுமார் 40 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் பாடி வரும் அல்கா யாக்னிக் தன் வாழ்நாளில் ஏறக்குறைய 8000 பாடல்கள் வரை பாடியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appறிப்பாக 90களில் மிகப் பிரபலமடைந்த அல்கா யாக்னிக் பல நடிகைகளுக்கும் பின்னணிக் குரல் கொடுத்தும் வந்துள்ளார்.
, யூடியூப் தளத்தில் அதிகம் கேட்டு ரசிக்கப்பட்ட கலைஞர் என்ற சாதனையைப் புரிந்து அல்கா யாக்னிக் கவனமீர்த்துள்ளார்.
கொரிய இசைக்குழுவான பிடிஎஸ், பிரபல அமெரிக்க பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்கள், பாடகர்கள் பலரை பின்னுக்குத் தள்ளி, யூடியூப்பில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட கலைஞர் எனும் பெருமையை அல்கா யாக்னிக் பெற்றுள்ளார்.
கின்னஸ் புத்தகத்தின் படி 2022ஆம் ஆண்டில் உலக அளவில் யூடியூப்பில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட கலைஞராக அல்கா உருவெடுத்துள்ளார்.
சராசரியாக ஒரு நாளைக்கு 42 மில்லியன் ஸ்ட்ரீம்கள் வீதம் அல்காவின் பாடல்கள் 15.3 பில்லியன் ஸ்ட்ரீம்களைப் பெற்றுள்ளன.
இவர் பாடிய தும் சாத் ஹோ பாடல், தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -