HBD Simran : ‘ஆடும் ஆட்டத்தை கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா..’ இடுப்பழகி சிம்ரனுக்கு இன்று பிறந்தநாள்!
சிம்ரன் ஏப்ரல் 4 ஆம் தேதி 1976ல் மஹாராஷ்ட்ராவின் மும்பையில் பிறந்தவர்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளர்.
தமிழில் விஐபி படம் மூலம் அறிமுகமானார் இவர் 1995 ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
நடிப்பிலும் நடனத்திலும் அசத்தி வந்த இவர், சிம்ரன் & சன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரிக்க தொடங்கினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சீமராஜா படத்தில் வில்லி ரோலில் நடித்து கம்-பேக் கொடுத்தார். பேட்ட படத்தில் “இளமை திரும்புதே..” என்ற பாடலில் க்யூட்டாக நடித்திருப்பார்.
சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். சிறந்த நடிப்பிற்காக 2003ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
சினிமா வாழ்வை தவிர்த்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சிம்ரனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.