Simran : ‘கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா..’மனதில் நின்ற சிம்ரனின் கதாபாத்திரங்கள்!
இடையழகி சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள்
90ஸ் ஆண்களின் மனம் கவர்ந்த சிம்ரன நடித்த படங்களில் மக்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களை காணலாம்.
எழில் இயக்கத்தில் 1999 இல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில், வரும் ருக்மணி கதாபாத்திரத்தை பலருக்கும் பிடிக்கும்.
1999 ஆம் ஆண்டு பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜோடி. இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதாநாயகனை காதலிக்கும் காயத்திரி, பல இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.
வாலி 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். இதில் வரும் ப்ரியாவையும் அனைவருக்கும் பிடிக்கும்.
ப்ரியமானவளே 2000 இல் வெளிவந்த திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். இந்த படத்திலும் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கன்னத்தில் முத்தமிட்டால் 2002இல் வெளியான திரைப்படமாகும். இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாக கொண்ட இப்படத்தில், இந்திரா எனும் பாசமிகு தாயாக நடித்திருந்தார்.