Shreya Ghoshal:'இவ்வளவு சின்ன வயதில் இத்தனை சாதனைகளா?’ க்யூட் குரலழகி ஸ்ரேயா கோஷலின் அறியாத பக்கம்!
இந்தியாவில் உள்ள மிக பிரபலமான பின்னணி பாடகர்களுள் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர், ஸ்ரேயா கோஷல். மிக சிறிய வயதிலேயே சங்கீதம் கற்றுக்கொண்ட இவர், வெவ்வேறு மொழிகளில் பாடும் திறமையுடையவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்ரேயா கோஷல் 4 வயதிலிருந்தே பாடல் பாட கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மொத்தம் 12 மொழிகளில் பாடல் பாடும் திறன் உடையவர் ஸ்ரேயா
கசல், செம்மொழி இசை(Classical), பாப், பஜன் மற்றும் திரைப்பட பாடல்கள் என மொத்தம் 5 பாடல் வகைகளில் இவரது குரல் மிகவும் பிரபலம்
2002 ஆம் ஆண்டு ஷாருகான் நடிப்பில் வெளியாகியிருந்த தேவ்தாஸ் படம் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார், ஸ்ரேயா
தனது முதல் படத்திலேயே, தேசிய விருது மற்றும் ஃபிலிம் ஃபேர் விருதினை பெற்றார். அப்போது அவருக்கு வயது 18தான்
ஸ்ரேயா கோஷல் இதுவரை, பல மொழிகளில் 1000 பாடல்களுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்
2015ஆம் ஆண்டில் தனது இளவயது நண்பரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தேவ்யான் என்ற ஆறு வயது குழந்தை இருக்கிறது
ஸ்ரேயா, பாடல்களை பாடுவதற்கு முன்பு அதை தேர்ந்தெடுப்பதில் பயங்கர கராராக இருப்பாராம். கொச்சையான அல்லது இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும் பாடல்களை பாடுவதற்கு எப்போதும் இவர் சம்மதிக்க மாட்டாராம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -