கட்டதுரை குடும்பத்துக்கு வாரிசு வரப்போகுது; மனைவி மரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ஷாரிக்!

தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன் நடிகர்களில் ஒருவர் சிக்ஸ்பேக் மன்னன் ரியாஸ் கான். ஆத்மா என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கள்ளழகர், பத்ரி, சமுத்திரம், ஆளவந்தான், பாபா, ரமணா, வின்னர், ஒற்றன், கஜினி, திருப்பதி, பேரரசு, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, பேட்ட ராப் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சித்தி, அண்ணாமலை, நந்தினி, மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர், தனது தங்கையின் தோழியான உமா ரியாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் என்ற மகன் இருக்கிறார்.

1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஷாரிக் ஹாசன், பென்சில் என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். மேலும், இந்த நிகழ்ச்சியில் 49ஆவது நாளில் வெளியேறினார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள் சீசன் 1 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். இதையடுத்து டான், ஜிகிரி தோஸ்த், நேற்று இந்த நேரம் ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
ஆனால், பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. விஜய் டிவியில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மரியா ஜெனிஃபரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், ஏற்கனவே மரியாவிற்கு ஒரு குழந்தை இருக்கிறது. முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு தான் ஷாரிக்கை காதலித்துள்ளார். திருமணமும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ஷாரிக் மற்றும் மரியா இருவரும் இணைந்து குட்நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளனர். அதன்படி, போட்டோஷூட் மூலமாக இருவரும் குழந்தை பிறக்க இருப்பதை வித்தியாமாக அறிவித்துள்ளனர்.
அதாவது கையில் பிரெக்னன்ஸி கிட் மற்றும் குழந்தை கருவில் இருப்பது போன்ற ஸ்கேன் ரிப்போர்ட் மூலமாக இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதோடு இருவரும் லிப் டூ லிப் கிஸ்ஸூம் கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்த வீடியோவை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில் மரியாவை பார்க்கும் போது இப்போது கர்ப்பமாக இருப்பது போன்று தெரியவில்லை. அவர் கர்ப்பமாகி குறைந்தது 4 முதல் 6 மாதங்கள் இருக்கும் என்று தெரிகிறது. தாத்தா மற்றும் பாட்டியாகும் சந்தோஷத்தில் ரியாஷ் கானும், உமா ரியாஸும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -