Indian Re-release : இந்தியன் 2 ஓகே! இந்தியன் பார்ட் 1 ரீ ரிலீஸ் எப்போ தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் நடிகர் கமல்ஹாசன் அப்பா - மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக உள்ளது.
அதை தொடர்ந்து இந்தியன் 3 அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 12ம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்தியன் பார்ட் 1 வரும் ஜூன் 7ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் சோசியல் மீடியா பக்கம் மூலம் அறிவித்துள்ளார்.