Shalini AjithKumar: 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..'ஷாலினி-அஜித்குமாரின் அழகான லவ் ஸ்டோரி தெரியுமா உங்களுக்கு?
கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி, ஷாலினி-அஜித்குமார். ஜோடியாக சில படத்தில் நடித்த இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தது எப்படி தெரியுமா? வாங்க அவர்களுடைய காதல் கதையை தெரிந்து கொள்வோம்.
ஷாலினியின் முதல் படமான ‘காதலுக்கு மரியாதை’பெரிய ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து, ஷாலினி தனது 12ஆம் வகுப்பு தேர்வுக்கு படிப்பதில் பிசியாக இருந்தார். ஆனால், இயக்குநர் சரண் ஷாலினியை அமர்களம் படத்தில் நடிக்க வைப்பதில் குறியாக இருந்தார். இதையடுத்து, படத்தின் நாயகன் அஜித் ஷாலினிக்கே நேராக போன் செய்து படத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஷாலினியின் தேர்வுகளுக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது.
பலரும், அஜித்-ஷாலினி முதன் முதலில் சந்தித்துக் கொண்டது அமர்களம் படத்தின் படப்பிடிப்பில்தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் முதன்முதலில் பார்த்துக் கொண்டது ‘காதல் மன்னன்’படத்தின் ப்ரீமியர் ஷோவில்தான்.
அப்போது ஷாலினி சுருள் முடி ஹேர்-ஸ்டைல் செய்திருந்தாராம். இதைப்பார்த்த அஜித், “உங்களுக்கு இந்த சுருள் முடி நன்றாக இல்லை” என கூறினாராம். இதைக்கேட்டவுடன் ஷாலினியின் முகம் வாடிவிட்டதாம். அஜித் உடனே, “காதலுக்கு மரியாதை படத்தில் உங்கள் முடி காற்றில் அலைமோதியது பார்க்க அழகாக இருந்தது” எனக்கூறினாராம். அஜித்தின் இந்த மரியாதை தனக்கு பிடித்திருந்ததாக 2010ஆம் ஆண்டில் ஒரு பேட்டியில் ஷாலினி குறிப்பிட்டிருந்தார்.
அமர்களம் படத்தில் ஷாலினியின் கையில் அஜித் வெட்டு போடுவது போன்று ஒரு சீன் வரும். இதன் படப்பிடிப்பின் போது ஷாலினிக்கு நிஜமாகவே அடிப்பட்டு விட்டது. இதனால், அஜித் மிகவும் சோகமாகி விட்டாராம்.
அமர்களம் படத்திற்கு பிறகு அஜித்தும் ஷாலினியும் நெடுநாட்களாக காதலித்து வந்தனர். ஆனால், இதனை வெளி உலகிற்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
இருப்பினும், இவர்களின் காதல் குறித்த சில தகவல்கள் வெளியில் கசிந்தன. அதன்படி, அஜித்-ஷாலினி அடிக்கடி வெளியில் சந்தித்துக் கொண்டதாகவும் ஷாலினியின் பெற்றோர், அஜித்தை சந்திக்க சில முறை வந்ததாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், இவர்களின் காதல் குறித்த சில தகவல்கள் வெளியில் கசிந்தன. அதன்படி, அஜித்-ஷாலினி அடிக்கடி வெளியில் சந்தித்துக் கொண்டதாகவும் ஷாலினியின் பெற்றோர், அஜித்தை சந்திக்க சில முறை வந்ததாகவும் கூறப்பட்டது.
‘வருடத்திற்கு ஒரு படத்தில்தான் நான் நடிப்பேன்’ எனவும், ‘மாதத்திற்கு 15 நாட்கள் வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவேன்’ எனவும் ஷாலினிக்கு அஜித் ஒரு சத்தியம் செய்து கொடுத்திருப்பதாக சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
23 வருடங்கள் கடந்த பிறகும், இவர்களது காதல் கதை இன்றும் பேசப்பட்டு வருவது அவர்களின் காதலுக்கு கிடத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.