Shalini Ajith Kumar: ‘வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்..' 23ஆவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்-ஷாலினி!
பலருக்கு பிடித்த கோலிவுட் ஜோடியாக அறியப்படுபவர்கள், அஜித்-ஷாலினி.
அமர்களம் படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள், சில ஆண்டுகளில் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாகிவிட்டனர். 2000ஆம் ஆண்டு திருமண பந்தத்திலும் நுழைந்துவிட்டனர்.
அஜித், தன் குடும்ப வாழ்க்கையை ஊடகத்தின் கேமரா பிடியில் இருந்து தள்ளி வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்புதான் ஷாலினி இன்ஸ்டா பக்கத்தில் தனது கணக்கை துவக்கினார்.
ஷாலினி, அடிக்கடி குடும்ப புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். வெளிநாட்டு டூர், கணவருடன் எடுத்த புகைப்படங்கள் என பலவற்றை அவர் வெளியிட்டிருந்தார்.
அஜித்-ஷாலினி, தங்களின் 23ஆவது திருமண நாளை நேற்று கொண்டாடினர். இவர்களுக்கு சமூக வலைதளங்கள் முழுவதும் வாழ்த்து குவிந்தன.
அஜித்-ஷாலினி தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.