Jawan Records : பாக்ஸ் ஆஃபிஸை தெறிக்கவிடும் ஜவான்.. வார இறுதியில் 500 கோடி வசூலை அள்ளுமா?
வேட்டி வெடித்து, கட்-அவுட் அடித்து, மேள தாளத்துடன் பெரும் வரவேற்புடன் வெளியான ஜவான் படம், ஸ்ரீநகரில் இருந்து சென்னை வரை உள்ள திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லானது. இப்படம் செய்த சாதனைகள் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன் பதிவு மூலம் அதிக வசூலை செய்த ஹிந்தி படம் : ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கான முன் பதிவு வசூலே, 45 கோடி ரூபாயை கடந்துள்ளது. இதற்கு முன்பு வெளியான பதான் படம், முதல் நாளில் மட்டும் 1.8 மில்லியன் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது.
உலகளவில் செய்த சாதனை : வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் 129.6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது ஜவான். இந்த அதிகாரப்பூர்வ தகவலை ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்தியாவில் 84.50 கோடி ரூபாயை வசூல் செய்து இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
உலகளவில் பெரிய ஓபனிங் பெற்ற பாலிவுட் படம் : ஆர்.ஆர்.ஆர், பாகுபலி 2, கே.ஜி.எஃப் 2 வரிசையில், ஜவான் அதிக வசூலை ஈட்டி, நான்காவது இடத்தை பிடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமையை அடைகிறது.
வார இறுதியில் 400 கோடி வசூல் : கடந்த வியாழக்கிழமை வெளியான ஜவான், வார இறுதி நாட்களில் இந்தியாவில் 300 கோடி ரூபாயையும் மற்ற நாடுகளில் 150 கோடி ரூபாயையும் வசூல் செய்து, மொத்தம் 450 கோடி ரூபாயை வசூல் செய்து விடும் என கணிக்கப்படுகிறது. அடுத்ததாக இப்படம், வெளியான முதல் நான்கு நாட்களில் 500 கோடி ரூபாயை வசூல் செய்யுமா? என்பதே பெரும் கேள்வி.
அமெரிக்காவில் பெரும் ஓபனிங்கை பெற்ற ஹிந்தி படம் : அமெரிக்காவில் மட்டும் முதல் நாளில் 33,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் 500,000 டாலர்களை வசூல் செய்துள்ளது. நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஜவானிற்கு கூடுதல் காட்சிகளும் கூடுதலான திரையரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -