Jawan Pre Release Highlights : ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் இதோ!
நேற்று மாலை ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடந்த ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கதாநாயகன் ஷாருக்கான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தது. அதைப்பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.
ஜவான் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அட்லீ சார் மற்றோன்று விஜய் சேதுபதி. நான் ராக் ஸ்டார் அனிருத்தின் மிக பெரிய ரசிகை. தி மேன் ஷாருக்கான்! அவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தேன். மீண்டும் எனக்கு உங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவே இல்லை. உங்களை நான் அடிமனதில் இருந்து நேசிக்கிறேன், உங்கள் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது. - பிரியா மணி
“பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூயிஸை 2.8 பில்லியன் மக்களுக்கு தான் தெரியும். ஆனால், ஷாருக்கானை 3.2 பில்லியன் மக்களுக்கு தெரியும். ‘ஆள போறான் தமிழன்’ பாடலை பாலிவுட் கிங் ஷாருக்கானையே தமிழில் பாட வைத்துவிட்டார் அட்லீ.இனம் மொழி, கலாச்சாரம் என எல்லாத்தையும் தாண்டி ஜவான் சாதனை படைக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு அனைவரது உழைப்பும் உள்ளது. அட்லீ கடின உழைப்பாளி. ஜவானில் குட்டி தமிழ் பாடல் உள்ளது” - பாடலாசிரியர் விவேக்
“இயக்குநர் அட்லீயின் கருப்பு நிறம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது லுக் அழகாக இருக்கும். என்னுடைய ஸ்கூல் நாட்களில் நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண் சவுக்கார்ப்பேட்டை. ஆனால் அந்த பெண்ணிற்கு ஷாருக்கானை தான் ரொம்ப பிடித்து இருந்ததது. அப்போது தெரியவில்லை. இத்தனை நாட்களுக்கு பிறகு அவரை நான் பழிவாங்குவேன் என்று.” - விஜய் சேதுபதி
கிங் கான் ஷாருக்கானையும் மேடைக்கு அழைத்து சென்று வந்த இடம் பாடலுக்கு நடனமாடினார். அத்துடன், “ஒருமுறை அவர் லண்டன் சென்றிருந்த போது என்னுடன் பேசிக்கொண்டே ஷாப்பிங் செய்தார். என்னுடைய ஷர்ட் சைஸ் எல்லாம் கேட்டார். எனக்காக ஷார்ட்ஸ் வாங்கி வந்தார். அவர் எப்போதும் என்னை அவருடைய டீமில் ஒருவராகவே பார்த்தார்” என அனிருத் பேசினார்.
எந்திரன் படத்தின் ஷீட்டிங்கின் போது மும்பைக்கு சென்றேன். அப்பொழுது ஷாருக்கான் வீட்டை பார்த்த நான் அவரது வீட்டிற்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றேன். 13 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்திற்கு மீண்டும் சென்றேன். உலகத்திற்கே பிடித்த ஷாருக்கான் எனக்காக நின்றிந்தார். கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பதால் 90 நாட்களுக்கு அவர் டிராவல் செய்ய கூடாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், 3 நாட்களில் படப்பிடிப்பை எடுக்க வேண்டும். இது குறித்து ஷாருக்கானிடம் தெரிவித்தேன். உடனே, ஷாருக்கான் ஷூட்டிங்கை நிறுத்தி விட்டார். அப்பொழுது, என்னை நான் பார்த்து கொள்கிறேன், நீங்கள் படத்தின் வேலையை பாருங்கள் என பிரியா சொன்னார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். பிரியாவின் ஒத்துழைப்பு தான் எனது வெற்றியின் ரகசியம். - இயக்குநர் அட்லீ
விஜய் சேதுபதி சார், ‘ நீங்கள் உங்கள் காதலியால் என்னை பழிவாங்கி விட்டதாக சொன்னீர்கள். நீங்கள் என்னை தோற்கடித்து இருக்கலாம். ஆனால், பெண்கள் எப்பொழுதுமே என்னுடையவர்கள். டான்ஸ் மாஸ்டரான ஷோபியிடம் கடினமான ஸ்டெப்ஸ் எனக்கு தரவேண்டாம், தளபதி போல எனக்கு டான்ஸ் வராது என கூறி இருந்தேன். அனிருத் என்னுடைய பேபி. எனது குழந்தைகள் போல தான் அவரும். மரண மாஸ் அட்லீ தேங்க்யூ சோ மச்....ஒளிமயமான விஷ்ணு தேங்க்யூ சோ மச்... தமிழ்நாட்டின் சாப்பாடு செம. இதனால் எனது சிக்ஸ் பேக்கை இழந்து விட்டேன். எனக்கு தொப்பை போட்டு விட்டது’ என கலகலப்பாக பேசி அரங்கையே அதிர வைத்தார் ஷாருக்.