Thalapathy 67 : புள்ளி வைத்தே ரோடு போட்ட தயாரிப்பு நிறுவனம்..6 மணிக்கு சொல்லப்போகும் அறிவிப்பு என்ன?
தனுஷ்யா | 30 Jan 2023 05:12 PM (IST)
1
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், 2021 ஆம் ஆண்டில் மாஸ்டர் வெளியானது.
2
மாநகரம், கைதி போன்ற சூப்பர் படங்களை இயக்கிய லோகேஷிற்கு, மாஸ்டர் படம் மூலம் புகழ் கிடைத்தது
3
இப்போது, இவர்களின் கூட்டணியில் தளபதி 67 உருவாகிவருகிறது
4
இந்த படம் குறித்த அப்டேட்கள், இணையத்தை ஆக்கிரமித்துள்ளது
5
தளபதி 67 குறித்த முக்கிய அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என லோகேஷ் முன்பு கூறினார்
6
தற்போது, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ புதிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 67 என்ற எண் இடம்பெற்றுள்ளதால், தளபதி 67 குறித்த அறிவிப்பு வெளியாகும் என பேசப்படுகிறது.
7
இவர்கள் வெளியிட்ட அந்த பதிவில் மொத்தம் 67 புள்ளிகள் இடம்பெற்றுள்ளன. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, தளபதி 67 படத்தை தயாரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.