✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரீதிகாவுக்கு வளைகாப்பில் ஒன்று திரண்டு சின்னத்திரை பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

மணிகண்டன்   |  22 Feb 2025 10:09 PM (IST)
1

நாதஸ்வரம் சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிகா. மகேஷ், சரண்யா மற்றும் பலர், வெண்ணிலா கபடி குழி, மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, வேங்கை பட்டாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

2

யாரடி நீ மோகினி, ஈரம் போன்ற படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றியிருக்கிறார். ஒரு சில டிவி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். நாதஸ்வரம், கோகுலத்தில் சீதை, வைதேகி, மாமியார் தேவை, குல தெய்வம், அழகு, மகராசி, சுந்தரி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

3

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய அப்பா ஒரு பிஸினஸ்மேன். ஸ்ரீதிகாவின் மூத்த சகோதரி சுதா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார்.

4

அவரது உதவியால் ஒரு சில விளம்பரங்களில் நடித்த ஸ்ரீதிகாவிற்கு படங்களிலும், சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், சினிமாவில் போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில் சீரியல்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

5

சீரியல்களில் பிஸியாக இருக்கும் போதே சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகராசி என்ற சீரியல் மூலமாக ஸ்ரீதிகா மற்றும் ஆர்யன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

6

இந்த தொடரில் இருவரும் ஒன்றாக நடித்ததன் மூலமாக இருவருக்கும் பிடித்துவிட்டது. இதையடுத்து திருமணம் செய்து கொண்டனர்.

7

அப்போது இருவருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். ஏற்கனவே ஆர்யனுக்கு நடிகை நிவேதிதா உடன் திருமணம் நடந்தது. ஆனால், கொஞ்ச நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதே போன்று தான் ஸ்ரீதிகாவிற்கும் அவரது முதல் கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

8

இதைத் தொடர்ந்து மகராசி சீரியல் மூலமாக ஒன்றாக நடித்து காதலித்து அவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை தொடர்ந்து ஸ்ரீதிகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை இருவரும் வெளியிட்டனர்.

9

இந்த நிலையில் தான் நேற்று ஸ்ரீதிகாவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

10

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஆர்யன் உடன் லட்சுமி சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தவிர மற்ற சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். வளைகாப்புக்கு முன்னதாக இருவரும் போட்டோஷூட்டும் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11

இதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஸ்ரீதிகாவை மற்றும் ஆரியன் ஜோடியை வாழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரீதிகாவுக்கு வளைகாப்பில் ஒன்று திரண்டு சின்னத்திரை பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.