September Releases : செப்டம்பர் மாதத்தை குறிவைத்த பான் இந்திய திரைப்படங்கள்!

பான் இந்திய படங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, பிரபு தேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ள படம் தி கோட். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள தேவரா பாகம் 1 படத்தை இயக்கியுள்ளார் கொரட்டாலா சிவா. இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் பரவி வருகிறது.
டி.வி.வி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள OG படமும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.