Saritha Lokesh Kanagaraj : ‘எனக்கு லோகேஷ் கனகராஜ் பிடிக்கும்..’ எல்.சி.யூவில் இணைய ஆசைப்படும் விண்டேஜ் நடிகை சரிதா!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் மாவீரன். இந்த படத்தை மடோn2 அஸ்வின் இயக்கினார்.
இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, அதிதி ஷங்கர், சரிதா என்று பல பிரபலங்கள் நடித்துள்ளனர்
இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 5 நாளில் 50 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
விண்டேஜ் நடிகையான சரிதா சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்தார். அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், யார் இயக்கத்தில் நடிக்க ஆசை? உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார்? என்று கேள்வி கேட்டார்
இதற்கு சரிதா, “நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
சரிதா மேலும் கூறியதாவது “மலையாளத்தில் மகேஷ் நாராயணன். அவருடைய ‘மாலிக்’ பார்த்து அசந்துட்டேன். பகத் பாசிலுடைய ரசிகை நான். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரொம்பபிடிச்சது. அந்த இயக்குநர் ஜியோ பேபி என்னை அவர் படத்துல நடிக்கக் கேட்டார். கன்னடத்துல பிரஷாந்த் நீல். கே.ஜி.எஃப்’ல மிரட்டிட்டார். தெலுங்குல கோபிசந்த் மல்லினேனி”.