HBD Saritha : நடிப்பாலும் குரலாலும் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை சரித்தாவின் பிறந்தநாள் இன்று!
சினிமா துறைக்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தர் தான் சரிதாவையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
பாலசந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'மரோசரித்ரா' படத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை சரித்தா
அடுத்ததாக தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான 'தப்புத் தாளங்கள்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியானார்.
கண்களாலே வசனம் பேசும் அளவிற்கு திறமை கொண்டவர்கள் நடிகை ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீ வித்யா. இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த வித்தை சரிதாவுக்கே ஒத்துப்போகும்.
நடிகை சரிதாவின் மெளன கீதங்கள், பொண்ணு ஊருக்கு புதுசு, தண்ணீர் தண்ணீரும், அக்னி சாட்சி, வேதம் புதிது, நெற்றிக்கண், மலையூர் மம்பட்டியான், தங்கைக்கோர் கீதம், ஊமைவிழிகள், ஜூலிகணபதி இப்படி சரிதா நடித்த படங்கள் இன்றும் மனதில் பதிந்து கிடக்கிறது.
நடிப்பில் இருந்து விலகினாலும் தன் வசீகரமான குரலால் பல ஹீரோயின்களின் நடிப்பிற்கு உயிர் கொடுத்தார் இன்று தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்