HBD Raadhika Sarathkumar : ஆசை மனைவி ராதிகாவிற்கு காதல் பொங்க வாழ்த்து தெரிவித்த சரத்குமார்!
1978-ஆம் ஆண்டு ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக ராதிகா சரத்குமார் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App16 வயதே ஆன ராதிகா, தன்னைவிட மூத்த நடிகரான சுதாகருடன் இணைந்து பாஞ்சாலி கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். முதல் படத்திலேயே நடிப்பின் மூலம் பெரிதாக பேசப்பட்ட ராதிகா அடுத்தடுத்த படங்களில் கொடிக்கட்டி பறந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் பிறந்த நாளை கொண்டாடிய சரத்குமார், ராதிகாவுடனான அழகிய தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் தொகுப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, திருமணம், நடிப்பு, அரசியல் என அனைத்திலும் தனக்கு பலமாக இருக்கும் ராதிகாவை புகழ்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 2001ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட ராதிகா, அவரின் சமத்துவ மக்கள் கட்சியிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து கேக் வெட்டி கொண்டாடினார் ராதிகா.
இந்நிலையில் இன்று தனது 61 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ராதிகாவிற்கு அவரது கணவரும் நடிகருமான சரத்குமார் காதல் பொங்க பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் ராதிகாவிற்கு தங்கள் பிறந்தநாளை வாழ்த்துகளை பொழிந்த வண்ணம் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -