Por thozhil review: சைக்கோ கில்லர் படத்தில் சாக்லேட் பாய் அசோக் செல்வன்..எப்படி இருக்கிறது போர் தொழில் ?? குட்டி ரிவ்யூ இதோ..
புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத் குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் சைக்கோ கில்லர் படமாக வெளியாகி உள்ள திரைப்படம் போர் தொழில்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகரடுமுரடான கண்டிப்பான போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சரத் குமார் மற்றும் புத்தக அறிவு மேலோங்கிய அசோக் செல்வன் இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளனர். கரடுமுரடான கண்டிப்பான போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சரத் குமார் மற்றும் புத்தக அறிவு மேலோங்கிய அசோக் செல்வன் இருவரும் தங்களது கதாப்பாத்திரங்களில் அசத்தியுள்ளார்.
திருச்சியை மையமாக வைத்து, ஒரே மாதிரியான தொடர் கொலைகள் எந்தவித தங்கு தடயமுமின்றி அரங்கேறி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன.
இந்த வழக்கு அசோக் செல்வன் - சரத்குமார் இணையின் கைகளுக்கு வர, தொட்டதுக்கெல்லாம் கடுப்படிக்கும் சரத்குமாரின் தலைமையின் கீழ், அசோக் செல்வன் கடுப்புடன் கடமையாற்ற வருகிறார்.
இதனிடையே சீரியல் கொலைகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபுறம் போலீசாரிடையேயான இன்னர் பாலிடிக்ஸ் முற்றுகிறது.
அவற்றை எல்லாம் தாண்டி, படு க்ளீனாக கொலை செய்யும் சீரியல் கில்லர் தொடர்பான மர்ம முடிச்சுகளை சரத்குமார்- அசோக் செல்வன் இணை எவ்வாறு அவிழ்க்கின்றனர், சீரியல் கொலையாளி யார், அவன் பின்னணி என்ன என்பதை விறுவிறு சைக்காலஜிக்கல் த்ரில்லராக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் ‘போர் தொழில்’.
மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தரமான சீரியல் கில்லர் படத்தை வழங்கி, க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து, முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா... படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வாழ்த்துகள்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -