Kushi Trailer : கையில் சிகரெட்..மீண்டும் ஒரு அர்ஜூன் ரெட்டியா? போஸ்டர் வெளியிட்ட விஜய் தேவரகொண்டா!
ஷிவா நிர்வாண இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் குஷி.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஆலப்புழாவில் நடைப்பெற்றது.
சமந்தாவின் உடல்நலக்குறைவால் இதன் ஷூட்டிங் தற்காலிகமாக நின்றுபோனது. குணமான பின் சமந்தா படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
இப்படத்தில் இருந்து வெளியான என் அஞ்சலி நீயா, ஆராத்யா ஆகிய பாடல்கள் இன்ஸ்டா ரீல்ஸில் ட்ரெண்டானது.படக்குழுவின் சார்பில் அவ்வப்போது பட போஸ்டர்களும் வெளியிடப்பட்டது.
காதலர்களுக்கு, குஷி படம் ரொமாண்டிக் சர்ப்ரைஸாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக விஜய் தேவரகொண்டா, தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இப்போது வெளியான போஸ்டரில், விஜய் தேவரகொண்டா கையில் சிகரெட் வைத்துள்ளது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது டாக்ஸிக்கான அர்ஜுன் ரெட்டி வாடை வருகிறது.