Salaar First single : அப்டேட் கொடுத்த இயக்குநரின் மனைவி..இன்று வெளியாகுமா சலார் படத்தின் முதல் சிங்கிள்?
கேஜிஎஃப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது‘சலார்’படத்தை இயக்கிவருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முன்னதாக சலார் படத்திற்கும் கேஜிஎஃப் படத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என பல தகவல்கள் பரவின.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி சலார் படத்தின் டீசர் அதிகாலை 5.12 மணிக்கு வெளியானது.
சலார் படத்தின் டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, குறுகிய நேரத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்தது.
தற்போது, இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என ட்விட்டரில், நேற்று முதல் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து பிரசாந்த் நீல் மனைவி லிகிதா நீல், தனது இன்ஸ்டா பக்கத்தில் சலார் படத்தின் முதல் சிங்கிள் குறித்து ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார். பதிவிட்ட சில நேரத்தில் அதை நீக்கவும் செய்துவிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -