Samantha Ruth Prabhu : 'ஊரு அழகி..உலக அழகி யாருமில்ல உனப்போல..’சமந்தாவிற்கு கோவில் கட்டி கொண்டாடும் ரசிகர்!
தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கு தேசம் சென்று கோலோச்சி நின்று, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘ஏ மாயா சேசாவே’ படத்தின் மூலம் 2010ஆம் ஆண்டில் அறிமுகமானார் சமந்தா.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அறிமுகமான சமந்தா தன் முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பைப் பெற்று, டோலிவுட் ரசிகர்களின் டார்லிங்காக மாறினார்.
இந்நிலையில், சமந்தாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வரும் தகவல் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், குண்டூர் அருகே உள்ள பாப்ட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தைச் சேர்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார்.
இன்று சமந்தா தன் பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இந்த சிலை அவரது பிறந்தநாளையொட்டி திறந்து வைக்கப்பட உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -