Nayanthara wishes samantha : சாமுக்கு வாழ்த்து சொன்ன நயன்...வைரலாகும் நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரி!
2010ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'யே மாயா சேசவே' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
இப்படத்தின் நடிகை சமந்தா ஜோடியாக நடிகர் நாக சைதன்யா நடித்திருந்தார்.
இதன் தமிழ் வெர்ஷன் தான் சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா'.
அந்த வகையில் நடிகை சமந்தா தனது திரை பயணத்தை துவங்கி 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
#14YearsOfSamanthaLegacy என்ற ஹேஷ் டாக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ரசிகர்கள் பலரும் சமந்தாவின் இந்த அற்புதமான வெற்றிகரமான திரைப்பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை நயன்தாராவும், சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துக்கள் சாம். ஸ்டே ஸ்ட்ராங் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வாழ்த்தி இருந்தார்.
2022ம் ஆண்டு வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் சமந்தாவும், நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தனர்.