Samantha : 10 கோடி சம்பளம் கேட்ட சமந்தா..ஷாக்கான இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்!
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் கௌதம் வாசுதேவ் மேனன் சமந்தாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.
இப்போது வரை 40க்கும் மேரற்பட்ட படங்களில் நடித்த சமந்தா பல ஹிட்களை கொடுத்துள்ளார். இதன் மூலம் இவரது மார்கெட்டும் சம்பளமும் அதிகரித்து கொண்டே போனது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா’என்ற பாடலுக்கு மட்டும் சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி கட்டி பறந்து கொண்டிருந்த சமந்தாவின் வாழ்க்கையில் திருமண வாழ்க்கை முறிவு, மயோசிடிஸ், சாகுந்தலம் பட தோல்வி என தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறார்.
முன்னதாக இவர் நடித்த ஃபேமிலிமேன் 2 படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பல வெப் சிரீஸ் வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. தற்போது சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சிரீஸின் இந்திய வெர்ஷனில் வருண் தவானுடன் இணைந்த நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெப் சிரீஸில் நடிப்பதற்காக சமந்தா 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் சிட்டாடலில் நடித்த பிரியங்கா சோப்ரா, கதாநாயகனுக்கு இணையான சம்பளத்தை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.