Salaar Box Office : மூன்றே நாளில் 400 கோடி வசூல்...ஜவான் - லியோ சாதனையை முறியடித்த சலார்!
பிரஷாந்த் நீலின் பிரம்மாண்டமான இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் டிசம்பர் 22ம் தேதி வெளியான திரைப்படம் 'சலார்'
பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரபாஸ் - பிரசாந்த் நீல் முதன்முறையாக இப்படத்தில் கூட்டணி சேர்ந்தனர்
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் படங்கள் எதுவுமே ஹிட் அடிக்காததால் 'சலார்' படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என 5 மொழிகளில் இப்படம் வெளியானது
ஷாருக்கானின் பதான், ஜவான், விஜய்யின் லியோ படங்களின் மூன்று நாள் வசூலையும் முறியடித்து விட்டது 'சலார்' திரைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
'சலார்' படத்தின் முதல் நாள் ஓபனிங் 178 கோடியை தாண்டி மாஸ் காட்டியது
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சலார் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் 400 கோடியை கடந்து சாதனை படைத்து வருகிறது