Pooja Kannan: அழகாக உணர்ந்த தருணம்...பூரிப்புடன் புகைப்படங்களைப் பகிர்ந்த பூஜா கண்ணன்!

நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம், படுகர் இன முறைப்படி, உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணன், ‘சித்திரை செவ்வானம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி தந்தார். ஆனால் தன் அக்கா சாய் பல்லவியைப் போல் அடுத்தடுத்து படங்களில் நடிக்காமல், பூஜா ப்ரேக் எடுத்தார். எனினும் தன் அக்கா சாய் பல்லவியுடன் இணைந்து புகைப்படங்கள் பகிர்வது, சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பது என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு அவர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார்

கடந்த வாரம் பூஜா கண்ணன் திருமணம் நடந்து முடிந்தது. கொண்டாட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். சமீபத்திய போஸ்ட்டில் அவருடைய மேக்கப், சிகை அலங்காரம் செய்த நபர்களின்
அவர் நெகிழ்ச்சியுடன் மேசேஜ் உடன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், “ மூன்று முக்கியமான நபர்களுக்காக இந்த போஸ்ட். ப்ரீதி, சுனிதா, சித்தி. திருமண நிகழ்ச்சிகளில் என்னுடைய மேக்கப் எப்படி இருக்குமோ என்பது குறித்து கவலையுடன் இருந்தேன். ஏனேனில், மேக்கப் அதிகமாகிவிட்டால் என்னாகும் என்ற கவலை இருந்தது. புதிய ஹெர்ஸ்டைல் செய்வது குறித்தும் எனக்கு பயம் இருந்தது. இவர்கள் அவற்றை கவனமுடன் பார்த்துக்கொண்டனர். மிகவும் அழகாக இருந்தேன். வித்தியாசமாக இருப்பேனோ என்ற பயம் இல்லாமல் என்னுடைய முக்கியமான நாளை கொண்டாட்டினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னலமற்று எப்படி காதலிப்பது, காதலில் எப்படி திளைத்திருப்பது என எனக்கு கற்றுத் தந்தவர் இவர் தான் வினீத். என் க்ரைம் பார்ட்னர்.. என் வாழ்க்கைத்துணை” என நெகிழ்ச்சியுடன் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் கணவர் பற்றி பதிவிட்டிருந்தார்.
சாய் பல்லவியின் தங்கை பூஜான் கண்ணன் குறிப்பிட்ட ப்ரீத்தி, சித்தி, சுனிதா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -