RS Durai Senthilkumar : ஆர் எஸ் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் உருவான படங்கள்!
சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், சதிஷ், நந்திதா ஆகியோர் நடித்திருந்த எதிர் நீச்சல் படத்தை துரை செந்தில் குமார் இயக்கி இருந்தார். இது தடகள போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2015 ஆம் ஆண்டு வெளிவந்த காக்கி சட்டை படத்தின் மூலம் சிவகார்த்திகேயனும், துரை செந்தில்குமாரும் இரண்டாவது முறையாக இணைந்தனர். கான்ஸ்டபிளாக இருக்கும் சிவகார்த்திகேயன், உடல் உறுப்புகளை திருடும் வில்லனின் செயல்பாடுகளை எப்படி தடுக்கிறார் என்பதே படத்தின் கதை. இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல் முதலில் இரட்டையராக நடித்து இருந்த படம் கொடி. இது ஆக்ஷன் கலந்த அரசியல் கதையம்சம் கொண்ட திரைப்படம். இப்படத்தில் நடிப்பதற்கு முதலில் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டாஸ் என்ற படத்தின் மூலம் தனுஷ் மற்றும் துரை செந்தில்குமார் கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்த படத்திலும் தனுஷ் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
சமீபத்தில் வெளிவந்த கருடன் படத்தை இயக்கி இருந்தார் துரை செந்தில்குமார். படக்கதையின் நாயகனாக சூரி நடித்து இருந்தார். ஆக்ஷன் நிறைந்த கதையை நான் லீனியராக படமாக்கியிருப்பார் துரை செந்தில்குமார் .
கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லெஜண்ட் சரவணனுடன் கைகோர்த்துள்ளார் துரை செந்தில்குமார். சமீபத்தில் கையில் துப்பாக்கியுடன் மாஸான போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் சரவணன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -