Karan johar : வெளியானது ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி ரிலீஸ் தேதி..கரண் ஜோகரின் பிறந்தநாளை முன்னிட்டு அப்டேட் கொடுத்த படக்குழு!
சுபா துரை | 25 May 2023 04:50 PM (IST)
1
பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் இயக்குநர், கரண் ஜோகர். பாலிவுட்டின் ஸ்டார்களை வைத்து பெரியளவில் வெற்றி படங்களை கொடுத்த இவர், இன்று 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2
மேலும் இவர் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் படம் “ ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி ” .
3
கரண் ஜோகரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை கரணின் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
4
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படம், வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
5
இந்த படத்திற்கு பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான ப்ரிதம் சக்ரபோர்தி இசையமைக்கிறார்.
6
மேலும், இந்த வருடம் சினிமா துறையில் கரண் ஜோகரின் 25 ஆவது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.