HBD Ritika Singh : ‘ஹே நூடுல்ஸ் மண்ட..’ ஓ மை கடவுளே நடிகை ரித்திகாவிற்கு இன்று பிறந்தநாள்!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இறுதிச்சுற்று படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். சிறுவயதில் இருந்து தற்காப்பு கலை பயின்று வரும் இவருக்கு ஏதுவாக எழில் மதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிளையாட்டு வீராங்கனையாக இருந்த இவர், சினிமா கொடுத்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
2020 ஆம் ஆண்டில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனின் தோழியாகவும், மனைவியாகவும் நடித்து இருந்தார்.
அந்த படத்தில் அசோக் செல்வன் கொடுத்த “நூடுல்ஸ் மண்ட” என்ற அடைமொழி இன்றும் பலராலும் பின் தொடரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வெளியான கொலை படத்திலும் நடித்திருந்தார். அத்துடன், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
ரஜினியின் வேட்டையன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரித்திகாவிற்கு லைகா நிறுவனம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -