Demonte Colony 2 : திகில் காட்ட ரெடியான அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 ட்ரெய்லர்!
2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் டிமாண்டி காலனி.
அந்த சமயத்தில் வரிசை வரிசையாக பேய் படங்கள் ரிலீஸாகி கொண்டிருந்தது. இப்படம், வழக்கத்திற்கு மாறான கதை களத்தில் உருவாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
காமெடி, திரில், அமானுஷ்யம் என எதற்கும் பஞ்சம் வைக்காமல், நல்ல வசூலை ஈட்டியது.
8 ஆண்டுகள் கழித்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு இந்தாண்டின் ஜனவரி மாதத்தில் வந்தது. அதன் பின், படப்பிடிப்பு காட்சிகளும், மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது
அதில், இந்தாண்டின் செப்டம்பர் மாதத்திலே படம் வெளியாகிவிடும் என்ற அறிவிப்பு வந்தது. ஒரு சில காரணங்களால், ரிலீஸ் தள்ளிப்போனது. அதன் பின்னர் எந்த அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ட்ரெயலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.