Michael jackson death anniversary: பாப் இசையுலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் நினைவு நாள் இன்று!
பாப் இசை என்றாலே அனைவரது நினைவிற்கு வரும் ஒருவர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாப் இசை, உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதன் காரணம் மைக்கேல் ஜாக்சன் என்றே சொல்லாம்.
இசை மட்டுமல்லாது தன் அசாத்திய நடன திறமையின் காரணமாக புகழின் உச்சத்தை அடைந்தவர் ஜாக்சன்.
வெறும் பொழுதுபோக்கு, ஆரவாரத்திற்காக மட்டுமல்லாமல் அவரது பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.
தனது வாழ்நாளில் பத்து ஆல்பங்கள் தான் அவர் பாடியிருந்தார் என்ற போதிலும் அனைத்தும் உலகளவில் பிரபலம் ஆனதோடு அவர் மறைந்த பிறகும் கூட பல ரெக்கார்டுகளை உருவாக்கி கொண்டு தான் இருக்கின்றன.
மேலும், தனது ஆறாவது வயது முதல் பாட தொடங்கி தன் முச்சு நிற்கும் வரை பாடி கொண்டே இருந்த மைக்கேல் ஜாக்சன், மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது என்பதே நிதர்சனம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -