Sakshi Agarwal: ஜன்னல் எல்லாம் ஓல்டு மாடல்! கதவே வைத்த ஜாக்கெட்டில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த சாக்ஷி அகர்வால்!
அட்லீ இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிரைப்படங்களில் நடிக்க வரும் முன், பிரபல ஐடி கம்பெனியில் பணிபுரிந்தார். தன்னுடைய காஸ்டியூம் முதல் மேக்கப் வரை அனைத்துக்கும் இவர் செலுத்தும் தனி கவனம், இவர் மாடலில் துறையில் நுழைய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
மாடலிங் செய்து கொண்டே, பட வாய்ப்பை தேடியவருக்கு தமிழில் எடுத்த எடுப்பில் பெரிய ரோல் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளை தவிர்த்து விடாமல் நடித்தார்.
இதை தொடர்ந்து யோகன், திருட்டு விசிடி போன்ற படங்களில் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தாலும், இந்த படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.
அந்த சமயத்தில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமாக்கியது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால், கவினை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சாக்ஷி என்னவோ உண்மையாக லவ் பண்ணினாலும், கவின் கண்ணு லாஸ்லியா மேல் விழுந்தது.
காதல் டிராக் குறுக்கிட்டதால், சாக்ஷி கேமில் கவனம் செலுத்தாமல் கவினை வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் சுற்றிவந்ததால், மக்களே நீ வீட்டுக்கு போமா 49 நாட்களில் வெளியேற்றினர்.
தற்போது திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு தன்னுடைய கேரியரில் வளர்ந்துள்ள சாக்ஷி அடிக்கடி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கிரீன் கலர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில், டீப் நெக் ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல் அவரின் கதவு வச்ச ஜாக்கெட் தான் ஹை லைட்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -