Rainbow : ரெயின்போ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு..மகிழ்ச்சியில் போட்டோ பதிவிட்ட ராஷ்மிகா!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஃபேண்டஸி கலந்த காதல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா
இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் இப்படம் அனைத்து வயதினருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில் அனைத்து வயது ரசிகர்களை கவர கூடிய திரைப்படமாக இருக்கும் ரெயின்போ திரைப்படம்.”
ரெயின்போ படத்தில் நடிப்பது குறித்து ராஷ்மிகா கூறுகையில் முதல் முறையாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படத்தில் நடிக்கிறேன்.”
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது இதன் படப்பிடிப்பு மூணார், கொடைக்கானல் போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளர் ராஷ்மிகா.