Rashmika Mandanna : ‘ஜிமிக்கி பொன்னு...’ பூஜையுடன் தொடங்கிய ராஷ்மிகா மந்தனாவின் புது படம்!
ABP NADU | 25 Mar 2023 02:57 PM (IST)
1
ராஷ்மிகா மந்தனா பிரபல இந்திய நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஷியாக நடித்து இருக்கிறார்.
2
தற்போது இவரது 21 ஆவது படத்திற்கான பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்பூஜையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
3
அப்படத்தில் இவர் நடிகர் நித்தினுடன் இணைந்து நடிக்கிறார்.இப்படத்தை இயக்குநர் வெங்கி குடுமுலா இயக்குகிறார்.
4
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பீஸ்மா திரைப்படத்தின் இயக்குநர், வெங்கி குடுமுலா இயக்க, ராஷ்மிகா மற்றும் நித்தின் இணைந்து நடித்தனர். ஆகையால் இப்புதிய படத்தை #VNRTrio ரீயூனியன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
5
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
6
பூஜையில் நடிகர் சிரஞ்சீவி முதல் க்ளாப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.