Animal First Single : காதலிக்கு விமானம் ஓட்ட கற்றுக் கொடுக்கும் கதாநாயகன்..வெளியானது அனிமல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா, தனது அடுத்த படத்தை ரன்பீர் கபூரை வைத்து இயக்கியுள்ளார்.
அனிமல் எனும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர், இந்த படத்தின் டீசர் வெளியானது. அர்ஜுன் ரெட்டி படத்தில் காதலியால் பாதிக்கப்பட்டு மோசமாக மாறும் கதாநாயகனை போல், சாதுவாக இருக்கும் இப்படத்தின் ஹீரோ தனது அப்பாவால் மிருகம் போன்ற குணத்தை பெறுகிறார்.
அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன பிரச்சினை என்பதே இப்படத்தின் கதையாக இருக்கும், அதற்கு இடையில், ராஷ்மிகா - ரன்பீருக்கும் இடையே கொஞ்சம் காதலும் இருக்கும்.
இன்று காலையில், அனிமல் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியானது.காதலி வீட்டில் சம்மதம் அளிக்காத பின், ராஷ்மிகாவை தனது ப்ரைவேட் விமானத்தில் அழைத்து செல்கிறார் ரன்பீர்.வானில் பறந்து கொண்டு இருக்கும் போதே, ராஷ்மிகாவிற்கு ரன்பீர் விமானம் ஓட்ட சொல்லித்தரும் காட்சிகளை பார்த்தால், ‘இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா’என தோன்றுகிறது.
ரன்பீரின் இந்த கேங்க்ஸ்டர் படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.